தாளம்:- திஸ்ர நடை                                                     இராகம்:-வாகேஸ்வரி

பாடசாலைக் கீதம்

வளர்மிகு கைதடி நாவற்குழி ஸ்ரீமகாவிஸ்ணு
வித்தியாலயம் வாழ்க
உளமாரப் போற்றி உன்பதம் பணிந்தோம்
ஓங்கி உயர்வுடன் வாழ்க

கல்வியும் கலைகளும் கவினுறவளர
களிப்பாய் நாம் கற்றே
நல்லுலகினில் நாமே நலமுடன் வாழ
நல்லருள் பொழிந்தே வாழ்க

அன்பும் அறிவும் அருளொடு பண்பும்
அகத்தினில் வளர்த்தே நாளும்
இன்பமாய் என்றும் இனிதாய் வாழ
ஏற்றுவோம் புகழ்வோம் வாழ்க

கவினுறு கலைகளும் கருத்துள்ள செயல்களும்
காணும் குருகுலமாய்
புவிதனில் வளர்ந்தே புகழுடன் ஓங்க
போற்றுவோம் இறையடி தனையே